


உள்ளாட்சியில் அருளாட்சி!
ஆன்மநேய சகோதர உறவுகள் அனைவருக்கும் அருட்பெருஞ்ஜோதி வந்தனம்.
பேரண்டத்தின் மையப்பகுதியான வடலூர் சத்திய ஞான சபையை தலைமையாகக் கொண்டு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தலைமையில் அருள் அரசாட்சி அமைத்துள்ளார். ஒவ்வொரு ஊராட்சியிலும் அருளாட்சி மலர்ந்திட அதற்கான செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களது கிராமங்களை மேம்படுத்த 2027 உள்ளாட்சி தேர்தலில் களம் காண தயாராகிக்கொண்டிருக்கும் அன்பர்களுக்கு இதன்மூலம் அழைப்பு விடுக்கப்படுகிறது. மாவட்டம் வாரியாக கலந்தாய்வு மற்றும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் இதில் பங்கேற்க விருப்பம் உள்ள அனைவரும் கீழ்க்கண்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் மாவட்டத்தில் கலந்தாய்வு பயிற்சி நடைபெறும் இடம் மற்றும் தேதி விபரங்களை அறிய telegram குழுவில் இணையவும்.




